கொரோனா எனக்கு அட்டாக் ஆகுன்னு முன்னாடியே தெரியும். இதுவும் நல்லதுக்கு தான் – அப்ரிடி வெளியிட்ட தகவல்

Afridi
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு உடல்நிலை சரியில்லை, என் உடல் மோசமாக வலித்தது “, “அதன் காரணமாக நான் ஒரு பரிசோதனை செய்துகொண்டேன்” துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மேலும் நான் இந்த கொடிய வைரஸ் தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர உங்களது பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து தங்களது பிரார்த்தனைகளை தங்களது கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாகித் அப்ரிடியின் உடல்நிலை மோசமானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவத் தொடங்கின. மேலும் இந்தச் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அடுத்து ஆஸ்பத்திரியில் இருந்த படி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சாகித் அப்ரிடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Afridi

அதில் எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்காகத்தான் இந்த பதிவினை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது கொஞ்சம் உடல்நிலை தேறி விட்டது என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அந்தப் பதிவில் அவர் கூறியதாவது : யாரும் என்னைப் பற்றி பதட்டப்பட தேவையில்லை. நீங்கள் இறுதிவரை போராட வேண்டும், நோயை தோற்கடிக்க வேண்டும். இந்த நாட்கள் மற்றவர்களைப் போல எனக்கும் மிக கடினமாகத்தான் இருக்கிறது. கடந்த எட்டு ஒன்பது நாட்களாக என்னுடைய குழந்தைகளை நான் பார்க்க முடியவில்லை.

Lovingafridi

மேலும் அவர்களை கொஞ்சவும், கட்டி அணைக்கவும் என்னால் முடியவில்லை அவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அப்ரிடி. மேலும் எனது உடல்நிலை குறித்து யாரும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் பேசியிருக்கும் இந்த வீடியோவில் தனக்கு கொரோனா ஏற்கனவே வரக்கூடும் என்பதை அறிந்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம்.

உங்களை சுற்றியுள்ளவர்களை பாதுகாப்புடன் இருக்க சமூக இடைவெளி அவசியமாகும். ஆனால் கொரோனா குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் ஒரு நிவாரணப் பணிகளுக்காக நிறைய இடங்களுக்கு பயணிக்கும்போது கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு என்பதை அறிந்தேன். நல்லவேளையாக இந்த பாதிப்பு எனக்கு கொஞ்சம் தாமதமாக ஏற்பட்டது.

நான் சென்ற இடங்கள் எல்லாமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்கள் இருப்பினும் அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் அங்கு சென்றேன். இருப்பினும் நான் அங்கு சென்றதால் தான் என்னால் நிறைய பேருக்கு உதவ முடிந்தது. இல்லை என்றால் நிறைய கஷ்டம் ஏற்பட்டிருக்கும் நான் குணமடைய எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.

Advertisement