பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு உடல்நிலை சரியில்லை, என் உடல் மோசமாக வலித்தது “, “அதன் காரணமாக நான் ஒரு பரிசோதனை செய்துகொண்டேன்” துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
மேலும் நான் இந்த கொடிய வைரஸ் தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர உங்களது பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து தங்களது பிரார்த்தனைகளை தங்களது கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாகித் அப்ரிடியின் உடல்நிலை மோசமானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவத் தொடங்கின. மேலும் இந்தச் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அடுத்து ஆஸ்பத்திரியில் இருந்த படி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சாகித் அப்ரிடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்காகத்தான் இந்த பதிவினை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது கொஞ்சம் உடல்நிலை தேறி விட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில் அவர் கூறியதாவது : யாரும் என்னைப் பற்றி பதட்டப்பட தேவையில்லை. நீங்கள் இறுதிவரை போராட வேண்டும், நோயை தோற்கடிக்க வேண்டும். இந்த நாட்கள் மற்றவர்களைப் போல எனக்கும் மிக கடினமாகத்தான் இருக்கிறது. கடந்த எட்டு ஒன்பது நாட்களாக என்னுடைய குழந்தைகளை நான் பார்க்க முடியவில்லை.
மேலும் அவர்களை கொஞ்சவும், கட்டி அணைக்கவும் என்னால் முடியவில்லை அவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அப்ரிடி. மேலும் எனது உடல்நிலை குறித்து யாரும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.