கோலியை வாழ்த்திய ஐ.சி.சி – அதற்கு அப்ரிடி என்ன பதிலளித்து இருக்கிறார் தெரியுமா ? – விவரம் இதோ

Afridi
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் கோலி 72 ரன்கள் குவித்து அதன் மூலம் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு ஐசிசி கோலிக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து உள்ளது.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்து வரும் கோலி தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அது யாதெனில் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் 50 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். எனவே அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஐசிசி அந்த செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

அதை கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கோலிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நீங்கள் உலகில் தலைசிறந்த வீரர் உங்களது வெற்றிகரமான பயணம் தொடர எனது வாழ்த்துக்கள். மேலும் அனைவருக்கும் உங்களது பேட்டிங் மூலம் விருந்தளியுங்கள் என்று தனது பாராட்டுகளை அப்ரிடி வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement