அப்ரிடி தேர்வுசெய்த உலக பெஸ்ட் லெவன். சச்சினுக்கே இடமில்லையாம் – சர்ச்சையாகவும் அப்ரிடியின் முடிவு

Afridi
- Advertisement -

பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது இந்திய வீரர்களுடன் நாகரிகத்தை கடைபிடிப்பதில்லை. அது ஆடுகளம் ஆயினும் சரி ,பொது வெளியிலும் சரி. எப்போதும் அநாகரிகமாக நடந்து கொள்வது அதிகமாக பேசுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் இதற்கெல்லாம் செவிசாய்க்க மாட்டார்கள்.

afridi

- Advertisement -

வேண்டுமென்றே சர்ச்சை செய்து இங்கே வீரர்களையும் இழுத்து சர்ச்சையை செய்பவர்கள் அவர்கள். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் சாகித் அப்ரிடி கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் கொண்ட ஒரு அணியை தேர்வு செய்து வெளியிட்டார். அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

இது வேண்டுமென்றே அவர் செய்துள்ளது போல் தெரிகிறது. இந்த அணியின் தொடக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் சையது அன்வர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து ரிக்கி பாண்டிங் 3வது இடத்திலும் விராட்கோலி 4வது இடத்திலும் இன்சமாம் உல் ஹக் 5வது இடத்திலும் உள்ளனர்.

Afridi

ஆல்-ரவுண்டராக ஜாக் காலிஸ் இருக்கிறார் வேகப்பந்து வீச்சாளறாக வாசிம் அக்ரம், க்லென் மெக்ராத் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளராக சக்லைன் முஷ்டாக் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு இடமில்லை என ஒரு சிறு பிள்ளை போல் நடந்து கொண்டிருக்கிறார் சாகித் அப்ரிடி.

- Advertisement -

ஷாஹித் அப்ரிடியின் சிறந்த லெவன்: சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல்-ஹக், ஜாக் காலிஸ், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷேன் வார்ன், சோயிப் அக்தர், சக்லைன் முஷ்டாக்

sachin

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவரும், 100 சதங்களை அடித்த முதல் அசாத்திய வீரர் சச்சினுக்கு இந்த அணியில் இடம் இல்லாதது குறித்து ரசிகர்கள் அப்ரிடியின் இந்த கண்மூடித்தனமான இந்த தேர்விற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் 200 டெஸ்ட் போட்டிகளை யாராலும் கனவில் கூட விளையாட முடியாது என்றும் சச்சின் போன்று 24 வருடங்கள் கிரிக்கெட் விளையாட ஒருவர் பிறக்க முடியாது என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவ்வளவு பெரிய ஜாம்பவான் சச்சினுக்கு இந்த அணியில் இடம் கொடுக்காத அப்ரிடியை இணையத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு இந்தி அணியின் மீதும் சச்சின் மீண்டும் உண்டான வன்மத்தை இந்த தேர்வு காட்டுவதாகவும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement