தற்போதைய கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த வீரர்கள் இவர்கள்தான் – சாகித் அப்ரிடி தேர்வு

Afridi

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கடந்த 1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகி 398 ஒருநாள் போட்டிகள், 99 டி20 போட்டிகள் மற்றும் 27 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். தனது 23 ஆண்டு கால கிரிக்கெட்டில் பல முன்னணி வீரர்களுக்கு எதிராகவும், அவர்களுடன் இணைந்து விளையாடி உள்ளார். கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியின் மிக அனுபவம் வாய்ந்த வீரர் என்று இவரை சொல்லலாம்.

Afridi

இந்நிலையில் தான் வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களில் தனக்கு பிடித்த வீரர்கள் யார் என்பது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதும் இன்ஜமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வருடன் ஆடியதை மிகப் பெருமையாக நினைக்கிறேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி என்னுடைய காலத்தில் பிரைன் லாரா மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் என்று கூறினார். மேலும் தொடர்ந்து தற்போதைய கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த வீரர்கள் குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த காலத்தில் எனக்குப் பிடித்த வீரர்கள் டிவில்லியர்ஸ், விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இவர்கள் மூவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

Azam

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் வீரரான பக்கர் சமான் சிறப்பாக விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தான் அணி எப்பொழுதும் வெற்றி பெறும். ஆனால் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாதது எனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement