கிரிக்கெட் உலகில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வந்து விடுகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் வீரர்களான தோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோரின் குழந்தைகள் சமூக வளைத்தளங்களில் லைம் லைட்டாக இருந்து வந்தனனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அப்பிரிடியின் மகள் புகைப்படம் ஒன்று டால்க் ஆப் தி ஷோவாக இருந்து வருகிறது.
பாகிஸ்தான் தான் அணியில் ஆல்ரவுண்டராக கலக்கியவர் ஷாஹித் அப்ரிடி. தனது 16 வயதில் முதல் சர்வதேச போட்டியில் விளையாட தொடங்கிய அப்ரிடி அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் டாப் கிளாஸ் வீரராக விளங்கி வந்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு’ பூம் பூம் அப்ரிடி’ என்ற பட்டப்பெயரும் வந்தது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிடி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கிரிக்கெட்டை தாண்டி இவர் ஒரு விலங்கு பிரியரும் கூட. இவரை போலவே தனது மகள் அஸ்மாரவாயும் ஒரு விலங்கு பிரியாராக வளர்க்க விரும்புகிறார் போல. சமீபத்துல் தனது மகள் புகைப்படத்தை பதிவிட்டதை கண்ட ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் அவருக்கு பின்னால் ஒரு சிங்கமும் அமர்ந்து கொண்டிருந்து.
மேலும் அந்த புகைப்படத்தில் அஷ்மோரா, தனது அப்பாவின் ட்ரேட் செய்கையை போலவே தனது இரு கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைபடத்தில் அப்ரிடி ‘ அன்புக்குரியவர்களுடன் எனது நேரத்தை கழித்துள்ளேன். நான் விக்கெட் எடுத்தால் கொண்டாம் செய்கையை என் மகள் காப்பி அடிப்பதை காணும் போது சிறப்பான உணர்வாக இருக்கிறது. மேலும், விலங்காகளும் அன்புக்கு அருகதை உடையவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் ‘என்று பதிவிட்டுள்ளார்.