Worldcup : தோற்றாலும் ஆப்கானிஸ்தான் அணியை கொண்டாடும் ரசிகர்கள் – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய

Afghanistan
- Advertisement -

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின.

afh

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ரன்களை அடித்தார். ரஷீத் கான் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்தார்.

பிறகு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வார்னர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்தார். பின்ச் 66 ரன்களை குவித்தார். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வானார்.

Warner

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தான் அணியில் இந்த போராட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பலமான அணியான ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

starc

இந்த தொடரின் இதற்கு முந்தைய ஆட்டத்தில் விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு சுருண்டது. விண்டீஸ் வெறும் 13.4 ஓவரிலேயே வெற்றி பெற்று அசத்தியது.
அதே போல் நியூசிலாந்து அணி இலங்கையை 105 ரன்களுக்கு சுருட்டியதோடு, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தோல்விகளை விட ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement