
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. அது யாதெனில் ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி அந்த 9 போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது.
மேலும் உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்ற அணி என்ற வரிசையிலும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது மூன்றாவது இடத்தில் இணைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜிம்பாப்வே அணி அந்த அணி 1983 ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.