ஒருவழியாக டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றி பெற்று ஆப்கனிஸ்தான் சாதனை – விவரம் உள்ளே

- Advertisement -

இந்தியாவில் சர்வதேச நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்தது. முழுவிவரம் அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

afgn vs irn

- Advertisement -

15 ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹமத் ஷா 98 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை நூல் இழையில் தவறவிட்டார்.

அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 288 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ஆண்ட்ரு 82 ரன்கள் எடுத்தார்.பிறகு 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது ஆப்கானிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் வெற்றியாகும்.

Afgn

இது வரை இரண்டு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி விளையாடி உள்ளது ஆப்கானிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு எதிராக ஆடியது அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமத் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆப்கானிஸ்தான் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement