55 ரன்ஸ்.. ஸ்காட்லாந்தை அசால்ட்டாக வீழ்த்தி.. லாரா கருத்தை நிஜமாக்கி அப்செட் செய்ய தயாரான ஆப்கானிஸ்தான்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக துவங்குகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் ஐசிசி நடத்தும் அதிகாரப்பூர்வ பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் மே 31ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 178/8 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 8, இம்ரான் ஜாட்ரான் 9, முகமத் நபி, நஜிபுல்லா ஜாட்ரான் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் குல்பதின் நைப் அதிரடியாக 5 பவுண்டரி 6 சிக்ஸ்ருடன் 69 (30) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அசத்திய ஆப்கானிஸ்தான்:
அவருடன் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய ஓமர்சாய் 48 (36) ரன்கள் எடுத்தார். இறுதியில் கேப்டன் ரசித் கான் முக்கியமான 15 (7) ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் சோல் 3, ப்ராட்லி கர்ரி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய ஸ்காட்லாந்து ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது.

குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் ஜார்ஜ் முன்சி அதிரடியாக 28 (18) ரன்கள் எடுத்தார். ஆனால் சார்லி டியர் 5, ப்ரெண்டன் மெக்முலன் 7, கேப்டன் ரிச்சி பேரிங்டன் 1, மேத்தியூ க்ராஸ் 1, மைக்கேல் லீஸ்க் 6 என மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஸ்காட்லாந்தை 123/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக கரீம் ஜானத், முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கடந்த 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளை பெற்றது. அதன் காரணமாக இந்த உலகக் கோப்பையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் 4 அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருக்கும் என்று ஜாம்பவான் ப்ரைன் லாரா கணித்திருந்தார்.

இதையும் படிங்க: சுனில் நரேன் உடனான முதல் சந்திப்பு இப்படித்தான் நடந்தது.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – கவுதம் கம்பீர்

தற்போது இப்போட்டியில் ஸ்காட்லாந்தை எளிதாக வீழ்த்தி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அவருடைய கணிப்பை நிஜமாக்கும் வகையில் செயல்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இதே வேகத்தில் முதன்மை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் சில பெரிய அணிகளை தோற்கடிக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் இம்முறையும் ஆப்கானிஸ்தான் சில அப்செட்டுகளை நிகழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement