- Advertisement -
இந்திய கிரிக்கெட்

36/7 டூ 106 ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்ட ஆப்கானிஸ்தான்.. இரட்டை சரித்திர சாதனை வெற்றி

ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. அத்தொடரின் முதல் போட்டி சார்ஜாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு ரிசா ஹென்றிக்ஸை போல்ட்டாக்கிய பரூக்கி அடுத்ததாக வந்த கேப்டன் ஐடன் மார்க்ரமையும் கிளீன் போல்ட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் மற்றொரு துவக்க வீரர் டே ஜோர்சியையும் 11 ரன்களில் காலி செய்தார். அதனால் 25-3 என ஆரம்பத்திலேயே தடுமாறி தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 0, கெய்ல் வேரின் 10, ஜே ஸ்மித் 0 ரன்களில் அல்லாஹ் கஜான்பர் சுழலில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

மிரட்டிய ஆப்கானிஸ்தான்:

அடுத்து வந்த பெலுக்வியோ 0 ரன்களில் டக் அவுட்டானார். அதனால் 36-7 என ஆரம்பத்திலேயே சரிந்த தென்னாப்பிரிக்கா 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய வியான் முல்தர் மிகவும் போராடி அரை சதமடித்து அதிகபட்சமாக 52 ரன்கள் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தென்னாப்பிரிக்கா வெறும் 106 ரன்களுக்கு சுருண்டது.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை ஒரு போட்டியில் ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக பசல்ஹக் பரூக்கி 4, அல்லாஹ் கஜான்பர் 3, கேப்டன் ரசித் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 107 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு குர்பாஸ் 0, ரியஸ் ஹசன் 16, ரஹ்மத் ஷா 8, கேப்டன் ஷாஹிதி 16 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

சரித்திர வெற்றி:

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததைப் பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ஓமர்சாய் 25* (36) ரன்களும் குல்பதின் நைப் அதிரடியாக 34* (27) ரன்களும் எடுத்தனர். அதனால் 26 ஓவரிலேயே 107-4 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளிலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் புதிய இரட்டை சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: தினமும் காலையில் பாதம் சாப்பாடுறீங்களான்னு கேள்வி கேளுங்க.. கௌதம் கம்பீரிடம் ரோஹித்தை கலாய்த்த கோலி

அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தவிர்த்து முழு அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் குறைந்தது ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய எழுச்சியை கண்டு 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக போர்ட்சுன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் அவமான தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -