புதிய கேப்டனாக ரஷீத் கானை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி – காரணம் இதுதானாம் சூப்பர் ஐடியா

Rashid

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சாதிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக லீக் சுற்றோடு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி.

Afg

இதன் காரணமாக அந்த அணியில் சில அதிரடி மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த குல்புதின் நயிப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அஸ்கர் ஆப்கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இனிவரும் போட்டிகளில் ரஷித் கான் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

afganteam

மேலும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக குல்புதின் நயிப் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ரஷீத் கான் இளம் வீரர் என்பதால் நீண்ட ஆண்டுகள் அவரால் கிரிக்கெட் விளையாட முடியும். எனவே அனுபவம் வளர வளர ரஷீத் ஆப்கானிஸ்தான் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என்று நம்பி அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளதாம் ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம்.

- Advertisement -
Advertisement