மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அதிரடி வீரர்…யாரை கேட்டுட்டு அங்கு போனீங்க..!என் தெரியுமா ? – காரணம் இதுதான்

shazad

அனுமதி பெறாமல் வெளிநாட்டிற்கு சென்று விளையாடிய அவரை உடனடியாக நாடுதிரும்ப உத்தரவிட்டுள்ளது ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் நிர்வாகம்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலங்களாக அபார வளர்ச்சியை பெற்றுவருகின்றது. அந்த அணியின் வீரர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி வருகின்றனர்.

Mohamed

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடி அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதிபெற்றது.சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிடும் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஜீன் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கால்பதிக்கவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான முகமது ஷாஷத் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தண்டனை பெறுவதையே வழக்கமாக கொண்டவர்.ஏற்கனவே இவர் போதைப் பொருளை உபயோகித்த புகாரில் சிக்கி ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைபெற்றார்.பின்னர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் அவுட்டான ஆத்திரத்தில், மைதானத்தை பேட்டால் அடித்து சேதப்படுத்தியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைபெற்றார்.

MohammadShahzad

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்தவுன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பலரும் நாடுதிரும்பிய நிலையில் ஷாஷத் மட்டும் அங்கிருந்து நேரடியாக பாகிஸ்தான் சென்று அங்கு நடைபெற்றுவரும் பி.எஸ்.எல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலே ஷாஷத் இந்த செயலை செய்ததால் கடும்கோபத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் நிர்வாகம் ஷாஷத்திற்கு 3இலட்ச ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமில்லாமல் உடனடியாக நாடு திரும்பிட உத்தரவிட்டுள்ளது.ஷாஷத் மட்டுமில்லாமல் முறையாக அனுமதி பெறாமல், வெளிநாடுகளில் விளையாடிவரும் அனைத்து வீரர்களும் உடனடியாக நாடு திரும்பிட வேண்டுமென்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement