அறிமுகமாவுள்ள 14 வயது வீரர். ஐ.பி.எல் தொடரில் நடக்கவுள்ள அதிசயம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Noor-1

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Ipl cup

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி டிசம்பர் 19ஆம் தேதி காலையில் 10 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐபிஎல் ஏலத்தின் நேரம் 10 மணிக்கு பதிலாக தற்போது மதியம் 2.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் 14வயது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது அறிமுகமாக உள்ளார். மேலும் ஏலத்தில் அவர் பங்கேற்கும் தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமது 14 வயது 344 வயது உடைய வீரராவார். இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அவரை ஏதேனும் ஒரு அணி வாங்கினால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற குறைந்த வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.அதனால் இந்த ஐபிஎல் தொடரில் அதிசயம் நடப்பது உறுதி.

noor 2

மணிக்கட்டு பகுதியை பயன்படுத்தி சுழல் பந்து வீசும் திறமை படைத்த நூர் அகமது ஆப்கானிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் அந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

Noor

ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான கண்டுபிடிப்பாக கருதப்படும் இவர் ஐபிஎல் போட்டிகளில் திறம்பட செயல்பட்டால் தேசிய அணியிலும் இடம் பெறுவது உறுதி என்றும் அவரின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக மாறும் என்றும் அவரது பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.