மோடியை கிண்டல் செய்த ஆப்கான் அதிபர்..! காரணம் ரஷீத் கான ..? – ஏன் ,எதற்கு தெரியுமா..?

modi
- Advertisement -

ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் .இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அணைத்து பந்து வீச்சாளர்களை விடஓவருக்கு 6.88 ரன்களை கொடுத்து குறைந்த பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.
ghani

பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார் இந்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர். நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றது ஹைதராபாத் அணி. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதுடன் 10 பந்துகளில் 34 ரன்களை அடித்து அனைவரையும் உறைய வைத்தார் ரஷீத். மேலும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

ரஷீத் கானின் திறமையை அனைவருமே ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் கூட ரஷித் கான் தான் உலகில் மிகச்சிறந்த சூழல் பந்து வீச்சாளர் என்று புகழ்ந்திருந்தார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் சூழல் பந்துவீச்சின் ஜாம்பவான் ஷேன் வர்னே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோரும் ரஷித் கானை பாராட்டினர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் ,அந்தநாட்டு அதிபரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமீபத்தில் ரஷித் கானை ட்விட்டரில் பாராட்டிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் காணி “எங்களுடைய ஹீரோவை கண்டு ஆப்கானிஸ்தான் பெருமை கொள்கிறது. எங்கள் நாட்டு வீரருக்கு இப்படி ஒரு மேடையை அமைத்து தந்த இந்திய நண்பர்களுக்கு நன்றி. ரஷீத் கான் ஆப்கானிஸ்தானின் பெருமையை நிரூபித்து விட்டார் , அவர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சொத்து. இல்லை, அவரை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் ” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement