கையும் களவுமாக சிக்கிய ஆப்கானிஸ்தான் வீரர். 6 ஆண்டுகள் தடை – அதிரடி காட்டிய நிர்வாகம்

Afg
- Advertisement -

ஆப்கானிஸ்தான் ஏற்கனவே ஒரு போர் நடக்கும் நாடாக இருந்து வருகிறது .எப்போதும் அந்த நாட்டில் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையிலும் அந்த அணி கிரிக்கெட்டில் சமீப காலமாக பெரும் அளவில் சாதித்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது.

Afg 1

- Advertisement -

அதனைத் தாண்டி சமீபத்தில் நடைபெற்ற 3 டி20 உலகக் கோப்பை தொடரிலும் அந்த அணி இடம்பெற்றது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அந்த இடம் பெற்று அசத்தியது. இந்நிலையில் அந்த அணியின் கிரிக்கெட் வாரியத்தை தகர்க்கும் வகையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் சபியுல்லா சபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டு மாட்டியுள்ளார் .

தற்போது 31 வயதான அவர் 24 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் . கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தாலும் வங்கதேச பிரிமியர் லீக்கில் சென்ற வருடம் தேர்வான போது சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளார்.

Afg 2

அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் தொடரிலும் இதே வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் மீது தற்போது நான்கு வகையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது .அவரும் விசாரணையில் இதனை ஒப்புக்கொண்டதால் ஆறு வருடங்கள் அவருக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரது இந்த தண்டனையை வரவேற்பதாகவும், மேலும் இதுமட்டும் போதாது இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement