Eng vs Pak : தோனியை போன்று ஸ்டம்பை பார்க்காமல் ரன் செய்து அசத்திய – இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி

Adil
- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

morgan

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரூட் 84 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் எடுத்தது கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 97 ரன்களை எடுத்தார் இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

england

இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் 80 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக அடில் ரஷித் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இந்த பந்தை தோனி எவ்வாறு ஸ்டம்பை பார்க்காமல் ரன் அவுட் செய்து வெளியேற்றுவாரோ அதனைப் போன்று அடில் ரஷீத் ரன் அவுட் செய்து அசத்தினார் இதோ அந்த வீடியோ :

அடில் ரஷீத் செய்த இந்த ரன் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய தொடரான இந்த தொடரில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement