உலக பெஸ்ட் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து நட்சத்திர வீரர். தோனிக்கே இடமில்லையாம் – அணி வீரர்களின் விவரம் இதோ

Rashid

இங்கிலாந்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷீட். இவர் உண்மையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் .தற்போது இங்கிலாந்து அணிக்காக சுழற்பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது தனக்கு பிடித்த மிகச் சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டார்.

Rashid 1

இந்த அணியில் இந்திய வீரர் தோனிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறிவிட்டார்.துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் ஆகியோரும் மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியும் நான்காவது இடத்திற்கு பாகிஸ்தானின் பாபர் அசாமும் இருக்கின்றனர். கேப்டனாக இங்கிலாந்தின் கேப்டனாக இருந்த இயான் மார்கனை நியமித்துள்ளார்.

ஆல்-ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். விக்கெட் கீப்பராக தோனியை புறம்தள்ளிவிட்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் ,தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ககிசோ ரபாடா நியூசிலாந்தை சேர்ந்த டிரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.

Bumrah

சுழற் பந்துவீச்சாளராக தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிர் தேர்வு செய்யப்பட்டுள்ளர் இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ராவிற்கும் இடமில்லை என்றும் கூறவிட்டார் அதில் ரஷிட். மேலும் அவர் தேர்வு செய்துள்ள இந்த பெஸ்ட் லெவன் அணி முற்றிலும் வித்தியாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடில் ரஷீத் தேர்வு செய்த அணி இதோ :

- Advertisement -

அடில் ரசித் உலக லெவன்:

ரோஹித் சர்மா
டேவிட் வார்னர்
விராட் கோலி
பாபர் அசாம்
இயான் மார்கன் (கே)
பென் ஸ்டோக்ஸ்
ஜாஸ் பட்லர்
மிட்சல் ஸ்டார்க்
காகிசோ ரபாடா
இம்ரான் தாஹிர்
டிரெண்ட் பவுல்ட்.