இந்திய வீரரான இவர் பேட்டிங் செய்யும் ஸ்டைலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் – ஆஸி வீரர் பூரிப்பு

Zampa

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ?எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஆர்சிபி அணிக்காக இந்த ஆண்டு விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா இந்த ஐபிஎல் தொடர் குறித்தும், ஆர்சிபி கேப்டன் விராத் கோலி குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் எனக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் ரிஸ்ட் பின்னர் சாஹலுடன் இணைந்து பந்து வீச ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எங்கள் இருவருக்குமே இது நல்ல தொடராக அமையும். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு கோலி பந்துவீச வாய்ப்பளிக்க வேண்டும். கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய உலகின் சிறந்த வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்களுடன் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். மேலும் விராட் கோலி பேட்டிங்கை செய்வதையும், பயிற்சி செய்வதையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

- Advertisement -

Zampa 1

அவ்வளவு ஸ்டைலாகவும் அழகாகவும் அவர் நேர்த்தியாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்று விராட் கோலியை புகழ்ந்துள்ளார் ஜாம்பா. சில முறை சர்வதேச போட்டியில் கோலியின் விக்கெட்டை ஜாம்பா வீழ்த்தியும் இருக்கிறார். இதனால் ஜாம்பாவின் பந்துகளை கோலியால் சரிவர கணிக்க முடியவில்லை என்பது ஓரிரு முறை சர்வதேச போட்டிகளில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.