
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 264/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ரோஹித் சர்மா 73, ஸ்ரேயாஸ் ஐயர் 61, அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 46.2 ஓவரில் 265/8 ரன்களை எடுத்துப் போராடி வென்றது. அதிகபட்சமாக மேத்தியூ ஷார்ட் 74, கூப்பர் கோன்லி 61* ரன்கள் அடித்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா வெல்ல உதவினார்கள்.
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற ஆஸ்திரேலியா தங்களை சொந்த மண்ணில் வலுவானான் என்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை எடுத்து விடுவதாக ஜாம்பா தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக மிடில் ஓவர்களில் தம்மைப் போன்ற ஸ்பின்னர்கள் சுதந்திரமாக பந்து வீசி தரமான இந்தியாவை தோற்கடிக்க முடிந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி ஜாம்பா பேசியது பின்வருமாறு. “இந்தியாவை தோற்கடிப்பது நல்லது. அவர்களுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் நல்ல போட்டி இருக்கும். இந்தியாவிலும் நாங்கள் எப்போதும் அவர்களை சோதிப்போம்”
“அவர்களும் இங்கே வந்து எங்களை சோதிப்பார்கள். நாங்கள் 2 அணிகளுமே எங்களை சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொண்டுள்ளோம். இந்தியா உலகின் சிறந்த அணி. அவர்கள் நீண்ட காலங்களாகவே சிறந்த அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களைப் போன்ற சிறந்த அணிக்கு எதிராக எங்களை நாங்களே சோதிப்பது நல்ல வாய்ப்பு. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலமாக பவர்பிளே ஓவர்களை நிர்வகித்து வருகிறார்கள்”
இதையும் படிங்க: ஆஸியிடம் மறுபடியும் இந்தியா தோற்க இதான் 2 காரணம்.. ரோஹித் மிஸ் பண்ணிட்டாரு.. கேப்டன் கில் வருத்தம்
“எனவே அவர்களை கொண்டிருப்பதற்காக நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்களுடன் தற்போது சேவியர் பார்லெட், நாதன் எலிஸ் ஆகியோரும் தங்களது வேலையை செய்கிறார்கள். அவர்களால் மிடில் ஓவர்களில் என்னுடைய வேலையை செய்வது எளிதாகிறது. எங்கள் கேப்டன் மார்ஷ் ரிலாக்ஸாக உணர்ச்சிவசப்படாமல் தலைமைத் தாங்குகிறார். நாங்கள் வயதானாலும் எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்று கூறினார்.