
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 23-ஆம் தேதியான இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 73 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களையும் குவித்து அசத்தினர். ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக ஆட ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், சேவியர் பேர்லெட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 60 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலை அவர் 11 ரன்களில் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஒரு செயல்பாட்டை கே.எல் ராகுலுக்கு எதிராக வெளிப்படுத்தி உள்ளார். அப்படி ஆடம் ஜாம்பா நிகழ்த்திய சம்பவம் யாதெனில் :
இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு பவுலரும் கே.எல் ராகுலை மூன்று முறைக்கு மேல் வீழ்த்தியது கிடையாது. ஆனால் இன்றைய போட்டியில் கே.எல் ராகுலை ஜாம்பா வீழ்த்தியதன் மூலம் ஐந்தாவது முறையாக அவர் ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுலை ஆட்டமிழக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நடந்த தவறு.. கவுதம் கம்பீரை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?
இதுவரை ஆடம் ஜாம்பா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் 14 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். அதில் ஆடம் ஜாம்பாவுக்கு எதிராக 183 பந்துகளை சந்தித்த கே.எல் ராகுல் அவருக்கு எதிராக 124 ரன்களை அடித்திருந்தாலும் 5 முறை அவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.