இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
கவுதம் கம்பீரின் தேர்வை விளாசும் ரசிகர்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வேளையில் இந்திய அணி சார்பாக எவ்வித மாற்றமும் இல்லை என சுப்மன் கில் அறிவித்திருந்தார். இப்படி சுப்மன் கில் அறிவித்த பிறகு தான் இந்திய ரசிகர்கள் பலரும் கெளதம் கம்பீர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது மீது விமர்சனங்களை முன்வைத்து கடுமையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலேயே முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை சேர்த்திருக்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது போட்டியிலாவது அவர் சேர்க்கப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியிலும் குல்தீப் யாதவிற்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு தான் ரசிகர்கள் பலரும் கௌதம் கம்பீரின் இந்த அணித்தேர்வை சரமாரியாக விளாசி வருகின்றனர்.
ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் ரிஸ்ட் ஸ்பின்னரான அவரால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிந்தும் அவருக்கு வாய்ப்பினை வழங்கவில்லை. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க : சவுரவ் கங்குலி மற்றும் ஆடம் கில்க்ரிஸ்ட் ஆகியோரது சாதனையை துவக்க வீரராக முறியடித்த – ரோஹித் சர்மா
இப்படி ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கௌதம் கம்பீர் ஏன் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவிற்கு அணியில் இடம் வழங்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அவருக்கு இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம்தான் என்று முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



