ஐ.பி.எல் தொடர் குறித்து நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன – பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஆடம் ஜாம்பா

zampa
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 14 ஆவது ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்திருந்த அவர் பயோ பபுளில் இருக்கும் அழுத்தம் காரணமாக வெளியேறினார். அவருடன் சேர்ந்து கேன் ரிச்சர்ட்ஸனும் சொந்த காரணத்திற்காக நாடு திரும்புவதாக அறிவித்திருந்தனர்.

zampa

- Advertisement -

மேலும் அவர்களது விலகலை ஆர்சிபி அணியும் அதிகாரப்பூர்வமாக தங்களது நிர்வாகம் சார்பாக வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாகவே இவர்கள் இருவரும் விலகினார்கள் என்ற செய்தியும் அப்போது வெளியானது. இது தொடர்பாக அப்போது ஆடம் ஜாம்பா அளித்த பேட்டியில் கூறியதாவது :

இந்த ஐ.பி.எல் தொடருக்காக கடந்த சில வாரங்களாக இங்கு இருக்கிறோம். ஆனால் இங்கு இருப்பது பாதுகாப்பாக இல்லை. ஒருவேளை இந்தியாவில் நான் இருப்பதால்தான் எனக்கு இப்படி தோன்றுவதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டி இருக்கிறது.

zampa 1

அதனால் எனக்கு இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் பாதுகாப்பானதாக தோன்றவில்லை என்ற கருத்தினை கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தான் கூறிய அந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஜாம்பா கூறுகையில் : நான் ஒருபோதும் ஐபிஎல் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் கொரோனா வைரஸ் நுழைந்து விடும் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

Zampa

ஐபிஎல் தொடர் மிகவும் மிகவும் பாதுகாப்பாகவே நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தொடர் இன்னும் சிறப்பாக நடைபெற்று முடியும் என்றும் தான் அதற்காக அந்த கருத்தினை வெளியிடவில்லை என்றும் சொந்த காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement