சி.எஸ்.கே அணிக்கு இப்போ ஒரே ஆறுதலா இவர்தான் அருமையா பவுலிங் பண்றாராம் – வெளியான தகவல்

Csk-practice
- Advertisement -

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி மற்ற ஐபிஎல் அணிகளை காட்டிலும் முன்கூட்டியே சூரத் நகருக்கு சென்று தங்கள் தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்து வலுவான அணியாக திகழ்ந்து வரும் சிஎஸ்கே அணி 2020 ஆம் ஆண்டை தவிர்த்து மற்ற அனைத்து ஆண்டுகளிலும் பிளே ஆப் சென்ற அணியாகவும் இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணிக்கு அடுத்த இடத்தில் சி.எஸ்.கே அணி உள்ளது.

csk 1

- Advertisement -

நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே அணி இம்முறையும் கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியிலிருந்து அனுபவ வீரர்களான டூபிளெஸ்ஸிஸ், ரெய்னா, ஷர்துல் தாகூர் ஆகியோர் வெளியேறி உள்ளதால் அந்த இடங்களை சரி செய்ய மாற்று வீரர்களுக்கான தேடல் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சில வீரர்களை சென்னை அணி ஏலத்தில் தேர்வு செய்திருந்தாலும் தற்போது அணியில் உள்ள சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வேளையில் அவர் காயம் காரணமாக ஆரம்பத்தில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவரது இந்த வெற்றிடம் தற்போது சென்னை அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

Milne

அதனை ஈடுகட்டும் விதமாக தற்போது ஆடம் மில்னே பயிற்சியின் போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த 29 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும் 9 போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அசால்டாக பந்துவீசும் அவர் வலை பயிற்சியின் போதும் அதிவேக பந்துகளை வீசி பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜியை பிரம்மிக்க வைத்துள்ளதால் நிச்சயம் அவருக்கு சென்னை அணியின் துவக்க போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : தோனிக்கு பின் அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

பயிற்சியின் போது பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என அனைத்து பந்துகளையும் வீசுவது மட்டுமின்றி, அவர் துல்லியமாக பந்துவீசி வருவதால் தற்போது அவரே சென்னை அணிக்கு பந்துவீச்சு துறையில் ஒரு ஆறுதல் அளிக்கும் வீரராக இருக்கிறார்.

Advertisement