டி20 உலககோப்பை : கட்டாயம் இவருக்கு பிளேயிங் லெவன்ல சேன்ஸ் குடுக்கனும் – ஆடம் கில்க்ரிஸ்ட் ஆதரவு

Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணிகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அனைத்து நாடுகளுக்கும் கெடு விதித்திருந்தன் காரணமாக தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் 16 நாடுகளும் தங்களது அணியில் இடம் பெற்றுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது. எனவே எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தற்போது இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான தங்களது அணியையும் அறிவித்து விட்டது. அதில் முதல் முறையாக சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட இருப்பதாகவும், அவர் அணியில் இடம் பெற்றுள்ளார் என்றும் அறிவித்தது.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்த டிம் டேவிட் பின்னர் ஆஸ்திரேலியாலில் நடைபெறும் பிக்பேஷ், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உலகெங்கிலும் நடைபெற்று வரும் அனைத்து டி20 தொடர்களிலும் பங்கேற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

tim david 3

அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு நடைபெறும் அனைத்து வகையான உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடினார். அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் தங்கி அந்நாட்டு குடியுரிமையை பெற்றதனால் தற்போது இந்த உலக கோப்பை தொடரில் எந்தவித சிக்கலும் இன்றி அவர் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலிய அணிக்காக அண்மையில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான தொடரில் அறிமுகமான டிம் டேவிட் தொடரின் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதிரடி ஆட்டக்காரரான அவரின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்த்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரனான ஆடம் கில்க்ரிஸ்ட் கட்டாயம் டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து உலககோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சுயநலமின்றி இந்தியாவுக்காக தனது விக்கெட்டை தியாகம் செஞ்சாரு, தடுமாறும் ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் பெரிய ஆதரவு

இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் கண்டிப்பாக இடம் பிடித்து விளையாட வேண்டும். ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவர் விளையாடும் ஆட்டத்தை பார்த்து எல்லா அணிகளும் பயந்து போய் உள்ளன. அவர் ஒரு போட்டியில் 15 முதல் 20 பந்துகளை பிடித்தாலே போதும் பெரிய அளவில் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆடம் கில்க்ரிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement