நான் திடீர் ஓய்வு முடிவினை அறிவிக்க இந்திய வீரரான இவரும் ஒரு காரணம் தான் – கில்க்ரிஸ்ட் பகிர்ந்த தகவல்

Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்காக 12 ஆண்டுகள் 1996ம் ஆண்டிலிருந்து 2008 வரை விளையாடியவர் ஆடம் கில்கிரிஸ்ட். 1999, 2003, 2007 ஆகிய மூன்று உலகக் கோப்பை இவரது காலத்தில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று தொடர்களிலுமே இவர்தான் விக்கெட் கீப்பராகவும், துவக்க வீரராகவும் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gilly

இவர்தான் தற்கால விக்கெட் கீப்பர்களுக்கு இவர்தான் டிரென்ட் செட்டர் என்றால் மிகையாகாது. தோனி இப்போது வந்து விட்டார். ஆனால், அதற்கு முன்னர் இவர் தான் விக்கெட் கீப்பிங்கில் பட்டையை கிளப்புவார்.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் 96 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 379 கேட்ஸ் 39 ஸ்டம்பிங் செய்துள்ளார், அதேபோல் 287 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள 417 கேட்ஸ் 55 ஸ்டம்பிங் செய்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் இவர் பெரிதாக ஆடியதில்லை .

Gilchrist 1

ஏனென்றால் 2008ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றுவிட்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக விக்கெட் எடுக்க பங்காற்றியவர்களில் 905 டிஸ்மிஸ்ஸல் உடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். தோனி 829 டிஸ்மிஸ்ஸல்ஸ் உடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் ஆன ஆடம் கில்கிறிஸ்ட் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பின்னர் திடீரென ஓய்வு அறிவித்தார்.

- Advertisement -

இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஆனார் விவிஎஸ் லட்சுமணனின் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டதால் தான் அந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ளார் கில்கிரிஸ்ட்…

Laxman 1

அவர் கூறுகையில் விவிஎஸ் எஸ் லட்சுமணன் போன்ற ஒரு வீரருக்கு கேட்ச் விட்டதே சரியான காரணமாக இருக்க முடியும். அவர் போன்ற வீரர்களுக்கு எல்லாம் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.

Advertisement