- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்களுடன் விளையாடியது மகிழ்ச்சி.. ரோஹித்துடன் இணைந்து எடுத்த செல்பியை பகிர்ந்த – ஆடம் கில்க்ரிஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் அக்டோபர் 23-ஆம் தேதியான இன்று துவங்கியது. இந்த ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்ரிஸ்ட் மைதானத்திற்குள் வந்து ரோஹித் சர்மாவுடன் நீண்ட நேரம் உரையாடி பின்னர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டது பலரது மத்தியிலும் கவனிக்கப்பட்ட விடயமாக மாறியது.

உங்களுடன் இணைந்து விளையாடியதில் மகிழ்ச்சி : ஆடம் கில்க்ரிஸ்ட்

இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இருக்கும் ஆடம் கில்க்ரிஸ்ட் மைதானத்திற்கு வந்து மைதானத்தின் தன்மையை பற்றி விவரித்த பின்னர் ரோகித் சர்மாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அவருடன் இணைந்து செல்பி ஒன்றினை எடுத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியதிலிருந்து இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதால் இந்த நிகழ்வு அரங்கேறியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஆடம் கில்க்ரிஸ்ட் ரோகித் சர்மாவுடன் இருக்கும் தனது நட்பு குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த செல்பி புகைப்படத்தோடு சேர்த்து அவர் பதிவிட்டதாவது :

இதே மைதானத்தில் தான் நாம் இருவரும் சந்தித்துக் கொண்டோம். கடந்த 2008 ஆம் ஆண்டு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது நாம் முதல்முறையாக சந்தித்துக் கொண்டோம். அதன் பிறகு அதே ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒன்றாக தேர்வு செய்யப்பட்டோம். ஐபிஎல் தொடரில் தான் நம்முடைய நட்பு ஆரம்பித்தது. அதன்பிறகு தற்போது இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன.

- Advertisement -

ஒரு இளம் வீரராக நான் உங்களை பார்த்தேன் தற்போது தலை சிறந்த இந்திய வீரர்களில் ஒருவராக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதிராகவும் சரி, உங்களுடன் இணைந்தும் சரி கிரிக்கெட் களத்தில் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு ரசிகராகவும், வர்ணனையாளராகவும் நான் உங்களை தெரிந்து வைத்துள்ளதை விட ஒரு நண்பராக நிறைய தெரிந்து வைத்துள்ளேன் என ரோகித்துடனான நட்பு குறித்து இதில் கில்க்ரிஸ்ட் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : ஏன்பா சிங்கிள் ஓடி வர முடியாதா? களத்தில் ஷ்ரேயாஸ் ஐயருடன் ரோஹித் சர்மா வாக்குவாதம் – நடந்தது என்ன?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 97 பந்துகள் சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -