
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் அந்த தொடரை கைப்பற்றி இருந்தது.
அதை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த ஆஸ்திரேலியா தொடரின் போது பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் களமிறங்கி விளையாடிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தாலும் இரண்டாவது போட்டியின் போது 73 ரன்களையும், மூன்றாவது போட்டியின் போது 125 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்த அவருக்கு இந்த ஆஸ்திரேலியா தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்ட கில்கிரிஸ்ட் ரோகித் சர்மாவுடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இந்த தொடரின் இடையே ஆடம் கில்க்ரிஸ்ட்டிடம் ஆஸ்திரேலியா அணிக்கு எந்த இந்திய வீரர் மிகவும் பொருத்தமாக இருப்பார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த கில்க்றிஸ்ட் கூறுகையில் :
இதையும் படிங்க : சூர்யவன்சியிடம் திறமையைத் தாண்டி.. யாராலும் கத்துக்கொடுக்க முடியாத மனநிலை இருக்கு.. டிராவிட் பேட்டி
ரோஹித் சர்மாவின் பெயரை தான் குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியதில் இருந்து நண்பர்களாக இருக்கும் கில்கிரிஸ்ட் மற்றும் ரோஹித் தற்போதும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அவரது பெயரை கில்க்ரிஸ்ட் கூறியுள்ளதாக தெரிகிறது.