சூர்யவன்சியிடம் திறமையைத் தாண்டி.. யாராலும் கத்துக்கொடுக்க முடியாத மனநிலை இருக்கு.. டிராவிட் பேட்டி

Rahul Dravid
- Advertisement -

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர்-19 போட்டியில் அதிரடியான சதமடித்தார். அதே போல உள்ளூரிலும் அசத்திய அவரை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வாங்கியது. அங்கே பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் அவருடைய திறமைகளைப் பார்த்து வாய்ப்பையும் வழங்கினார்.

அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 35 பந்தில் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இளம் (14) வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் நிகழ்த்தினார்.

- Advertisement -

இயற்கையான திறமை:

தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அண்டர்-19 தொடர்களில் அதிரடியாக விளையாடிய சூரியவன்சி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் சச்சின் டெண்டுல்கர் போல அவரும் இளம் வயதிலேயே விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று சில முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் சூரியவன்சியிடம் இயற்கையாகவே திறமை இருப்பதாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முதல் ஐபிஎல் பந்திலயே சிக்சர் அடிக்கும் அளவுக்கு தைரியமான மனநிலை அவரிடம் இயற்கையாக இருப்பதாக டிராவிட் தெரிவித்துள்ளார். அதை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் சூரியவன்சியிடம் இருக்கும் இயற்கையாக திறமையை மெருகேற்றினாலே இன்னும் அதிகமாக அசத்துவார் எனக் கூறியுள்ளார். இது பற்றி டிராவிட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ட்ராவிட் கருத்து:

“சூரியவன்சி போன்றவரிடம் உங்களுடைய திறமையின் விளிம்பை வெளிப்படுத்துங்கள் என்றே நீங்கள் சொல்ல முயற்சிப்பீர்கள். முதல் ஐபிஎல் பந்தில் அவர் சர்துள் தாக்கூருக்கு எதிராக சிக்சர் அடித்தார். இத்தனைக்கும் சர்வதேச வீரரான தாக்கூர் நல்ல பவுலர். அவரை அடிக்கும் அளவுக்கு சூரியவன்சிடம் திறமையை தாண்டி மனநிலை இருக்கிறது. அந்த மனநிலையை உங்களுக்கு கற்றுத்தர முடியாது. அதை உங்களது சொந்த வழியில் கையாள வேண்டும்”

இதையும் படிங்க: உணவுக்கு முன் தேநீர் இடைவேளை.. இந்தியா – தெ.ஆ 2வது போட்டியில் நிகழவிருக்கும் வரலாறு காணாத வினோதம்

“அதை தடை செய்ய முடியாது. ஒரு பயிற்சியாளராக அவருக்கு அதிகம் வழிகாட்டாத நான் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை வழங்கினேன். அவருக்கு பயிற்சியில் கடினமான அல்லது வெவ்வேறு சூழ்நிலைகளை உருவாக்கி பயிற்சி கொடுக்க வேண்டும். வலுவாக இல்லாத விஷயத்தில் பயிற்சி கொடுக்கலாம். பின்னர் அவரை தன்னுடைய சொந்த வழியை கண்டறிய அனுமதிக்க வேண்டும். அதுவே அவரை வளர்க்க நல்ல வழியாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement