பேட்டிங் சுமாராக இருந்தாலும் இதுக்காக விராட் கோலிக்கு 7.5 மார்க் கொடுப்பேன்.. ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி

Adam Gilchrist 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏமாற்றத் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வைட் வாஸ் தோல்வியையும் இந்தியா பதிவு செய்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. முன்னதாக அந்த தோல்விக்கு விராட் கோலி சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

பேட்டிங் துறையின் முதுகெலும்பான அவர் முதல் போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் மற்ற அனைத்து போட்டிகளிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை பரிசாக கொடுத்த அவர் இந்தியா தலைகுனிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று சில இந்திய ரசிகர்களை விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

பொழுப்போக்கிற்காக 7:

இந்நிலையில் அந்த தொடரில் விராட் கோலி சுமாராக விளையாடினாலும் களத்தில் பொழுதுபோக்கை உண்டாக்கியதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். குறிப்பாக சாம் கோன்ஸ்டஸ் தோளில் இடித்து தள்ளிய விராட் கோலி சர்ச்சையில் சிக்கி அபராதத்தை பெற்றுக்கொண்டார். மேலும் தமக்கு எதிராக கூச்சலிட்ட ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கடைசி போட்டியில் உப்பு காகிதம் பற்றிய செய்கைகளை காட்டி விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

அந்த வகையில் விராட் கோலி பொழுதுபோக்கை ஏற்படுத்தியதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை ஒரு ஆல் ரவுண்டர் பேக்கேஜ் என்று நம்மால் சொல்ல முடியும். அவர் விளையாட்டுக்கு நிறைய ரசிகர்களின் கண்களை கொண்டு வருகிறார். எனவே அவருக்கு 10க்கு 7.5 மதிப்பெண்களை நான் தருவேன்” என்று கூறினார்.

- Advertisement -

10க்கு 7 மதிப்பெண்:

அதே நிகழ்ச்சியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி களத்தில் உப்பு காகிதம் பற்றிய சைகைகளை எடுத்து வந்து ரசிகர்களுடன் மோதினார். வரலாற்றில் நான் பார்க்காத அளவுக்கு சாம் கோன்ஸ்டஸ் போன்ற வீரர் மேலே அவர் வேகமாக இடிக்க ஓடினார். அந்த வகையில் விராட் கோலி கொண்டு வந்த பொழுதுபோக்குக்காக அவருக்கு நான் 7 மதிப்பெண் கொடுக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை தொடர்ந்து சுப்மன் கில்லும் கம்பீரின் பேச்சை கேட்டு எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும் விராட் கோலி விளையாட உள்ளார். அந்தத் தொடர்களில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. இல்லையெனில் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகி விடும்.

Advertisement