- Advertisement -
ஐ.பி.எல்

27 கோடிக்கு ஸ்பார்க் மிஸ்.. திறமை இருந்தும் ரிஷப் பண்ட் சொதப்ப இதான் 2 காரணம்.. கில்கிறிஸ்ட் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அந்த அணி எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் இந்த தடுமாற்றமான விளையாட்டுக்கு கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்புவது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த வருடம் லக்னோ அணிக்காக 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் எப்படி அசத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சி பல சாதனைகள் படைத்துள்ள அவர் டி20 போட்டிகளில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தியதில்லை. அந்த சூழ்நிலையில் இத்தொடரில் இதுவரை அவர் 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

ஸ்பார்க் இல்ல:

அதிலும் பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் பேட்டை தவற விட்டார். அது காற்றில் பந்தை விட மேலே பறந்தது. மறுபுறம் பேட்டில் பட்ட பந்து கேடச்சாக மாறி அவருடைய விக்கெட்டை பறித்தது. அதனால் ரிஷப் பண்ட் வழக்கம் போல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் 27 கோடிக்காக வாங்கப்பட்டதால் கட்டாயம் அசத்த வேண்டும் என்ற அழுத்தமே ரிஷப் பண்ட் திறமை இருந்தும் தடுமாற்றக் காரணம் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கேப்டன்ஷிப் பொறுப்பு அவர் சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாகக் கூறும் கில்கிறிஸ்ட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை”

- Advertisement -

கில்கிறிஸ்ட் ஏமாற்றம்:

“அவர் சிரித்து, மகிழ்ந்து, ரிலாக்ஸாக, மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை அது கேப்டன்ஷிப் பொறுப்பால் இருக்கலாம். புதிய அணிக்கு உச்சபட்ச சம்பளத் தொகையுடன் வந்துள்ளதும் காரணமாக இருக்கலாம். அவர் தன்னுடைய உண்மையான குண நலனை வெளிப்படுத்துவதாகவும் தெரியவில்லை”

இதையும் படிங்க: போடு சக்க.. 28 பந்தில் 2வது உலக சாதனை சதமடித்த இளம் வீரரை வாங்கிய சிஎஸ்கே.. வெளியான அறிவிப்பு

“அவருடைய ஸ்ட்ரோக்பிளே மற்றும் ஸ்ட்ரோக் செலக்சன் ஆகியவையில் மகிழ்ச்சியான சமநிலை இருக்க வேண்டும். அதையும் தாண்டி அவரிடம் ஸ்பார்க் இருப்பதைப் பார்க்க முடியவில்லை. இயற்கையாகவே அவர் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களைப் பொழுது போக்கக்கூடியவர். இயற்கையாகவே துடிப்பான பாடி லாங்குவேஜ் கொண்டவர். இருப்பினும் கடந்த 10 – 11 போட்டிகளாகவே அவரை பார்த்து வருகிறேன். அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -