உலகின் மிகப்பெரிய டி 20 தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 11 வருடமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொடிகள் புரளும் இந்த தொடரில் இதில் பங்கு பெரும் வீரர்களுக்கும் வெற்றி பெரும் அணிகளுக்கும் கோடி கணக்கில் சம்பளம் வழங்க படுகிறது, இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 11 வது சீசனில் நடைபெற்ற சூதாட்டத்தில் சிக்கியுள்ளார் இந்தி நடிகரின் தம்பி சிக்கியுள்ளார்.
11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தொடரில் பல ஆண்டுகளாக சூதாட்டங்கள் நடைபெற்று வருவதாக பல புகார்கள் எழுந்தன. கடந்த 2017 ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால் தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மே 29 ஆம் தேதி இந்த சூதாட்ட கும்பலில் முக்கியமாக நபரராக செயல்பட்டு வந்த ஜலான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளது, இவர் ஏற்கனவே கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடதக்கது . இதையடுத்து இந்த விசாரணையில் இவர் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்துள்ளது என்றும் அதில் சில முக்கிய புள்ளிக்களும் இருக்கிறார்கல் என்று ஜலால் கூறியுள்ளார்.
அதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் தம்பி நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு உள்ளது என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து இன்று காலை காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் அர்பாஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.