இந்தியாவில் தான் இப்படின்னா ? அங்கேயும் அப்படியா ? யூ.ஏ.இ யில் ஏற்பட்டுள்ள சிக்கல் – ஐ.பி.எல் நடைபெறுமா ?

Dubai

13வது ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக அந்த நாட்டில் மூன்று மைதானங்களை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தயார் படுத்தப்பட்டு வருகிறது. துபாய் ஷார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மைதானங்களில் தான் மொத்தமுள்ள 60 போட்டிகள் நடைபெறும்.

ipl

இந் நிலையில் ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அபுதாபி நகரில் கரோனா வைரஸ் வெகு தீவிரமாக அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதுவும் ஐபிஎல் அட்டவணை இன்னும் அறிவிக்காததற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக அபுதாபியில் உள்ள மைதானத்தில் மட்டும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. மேலும் இதற்காக அந்த நாட்டு அரசு அபுதாபி நகரத்தை சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

அதனை தாண்டி இந்த மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட முடியவில்லை என்றால் போட்டிகளை குறைக்கவும், போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விடலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

- Advertisement -

Ground

ஒருவேளை இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை என்றால் 60 போட்டிகளில் குறைந்தது 20 போட்டிகளை யாவது ஐபிஎல் நிர்வாகம் குறைக்கும் என்பது தான் உண்மை. இந்த நாட்டில் மாற்ற மைதானங்கள் இருக்கிறது. இந்த மைதானங்கள் இவ்வளவு பெரிய தொடரை நடத்துவதற்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது.