எங்கய்யா இருந்த இத்தனை நாளா? 2வது டெஸ்டில் இங்கிலாந்தை மடக்கிய பாக் வீரர் – 72 வருடத்தில் புதிய வரலாற்று சாதனை

Abrar Ahmad Pak
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸில் சரியான நேரத்தில் தைரியமாக டிக்ளர் செய்த இங்கிலாந்து பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அதனால் பாகிஸ்தான் அணியும் தார் ரோட் போல் அமைக்கப்பட்ட பிட்ச்சுக்காக அந்நாட்டு வாரியமும் கடுமையான கிண்டல்களுக்கு உள்ளான நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி டிசம்பர் 9ஆம் தேதியன்று முல்தான் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து மீண்டும் அதிரடி அணுகு முறையில் விளையாடியது. ஆனாலும் சுழலுக்கு சாதகமாக இருந்த முல்தான் பிட்ச்சில் அறிமுகமாக களமிறங்கிய இளம் பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அஹ்மதின் துல்லியமான சுழலில் தடுமாறிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 19 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற பென் டன்கட் 63 கரங்களிலும் ஓலி போப் 60 ரன்களிலும் அவரிடமே ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

எங்கய்யா இருந்த:
அதை பயன்படுத்திய அப்ரார் அகமது மீண்டும் ஜோ ரூட் 8, ஹரி ப்ரூக் 9, கேப்டன் ஸ்டோக்ஸ் 20, வில் ஜேக்ஸ் 31 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி பாகிஸ்தானை தூக்கி நிறுத்தினார். அதனால் அதிரடியாக விளையாடியும் விக்கெட்டுகளை காப்பாற்ற தவறிய இங்கிலாந்து 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு அறிமுக போட்டியிலேயே அதிலும் ஆச்சரியப்படும் வகையில் இங்கிலாந்தின் முதல் 7 பேட்ஸ்மேன்களையும் காலி செய்த அப்ரார் அகமது பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருடன் ஜாகித் முகமது தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 0, ஷபிக் 14 என என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சற்று அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 1 சிக்சருடன் 61* (79) ரன்களும் ஷகீல் 32* (46) ரன்களும் எடுத்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது 107/2 ரன்களுடன் உள்ள பாகிஸ்தான் இங்கிலாந்தை விட 174 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் நல்ல நிலைமையில் உள்ளது.

- Advertisement -

இதற்கு அறிமுகப் போட்டியிலேயே சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அப்ரார் அகமது முக்கிய காரணமாக திகழ்ந்ததால் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். அதிலும் குறிப்பாக முதல் நாளின் உணவு இடைவெளிக்கு முன்பே 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே உணவு இடைவேளைக்கு முன் 5 விக்கெட்டுகளை எடுத்த 2வது வீரர் என்ற பெருமையும் முதல் ஆசிய மற்றும் பாகிஸ்தான் வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனைகளையும் படைத்தார்.

இதற்கு முன் கடந்த 1950 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் அல்ப் வேலண்டன் முதல் நாள் உணவு இடைவெளிக்கு முன்பு 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருந்தார். இதை பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் “முதல் போட்டியில் நீ எங்கேயா போயிருந்தாய்” என்று ஆனந்த கண்களுடன் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: PAK vs ENG : உயிரே போனாலும் அதை விடமாட்டோம், 2வது டெஸ்டிலும் 120 வருட புதிய உலக சாதனை படைத்தும் – தடுமாறும் இங்கிலாந்து

மேலும் அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக செயல்பட துவங்கியுள்ள அவர் 2வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்தை மடக்கி பிடித்து முதல் போட்டியில் சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை தோற்கடித்த தக்க பதிலடி கொடுக்கும் அளவுக்கு அசத்தலாக செயல்படுவார் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Advertisement