- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யுவ்ராஜ் சிங்கின் அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.. அபிஷேக் சர்மா – அளித்த பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது வெறும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான அபிஷேக்சர்மா ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 57 ரன்களையும் குவித்து இந்திய அணியை அட்டகாசமான வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

யுவ்ராஜ் சிங்கின் சாதனை யாராலும் முறியடிக்க முடியாது : அபிஷேக் சர்மா

இதன் மூலம் இந்திய அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடது கை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 20 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 68 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 14 பந்துகளை சந்தித்த அவர் அரைசதம் அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங்குக்கு பின்னர் படைத்திருந்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய அபிஷேக் சர்மா கூறுகையில் : இந்திய அணி என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது. அதைத்தான் நான் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் அதிரடியாக விளையாடும் போது அணியின் ரன் குவிப்பின் வேகமும் அதிகரிக்கிறது. இதனால் பின்னால் வரும் வீரர்களின் அழுத்தமும் குறைகிறது. அதன் காரணமாகவே நான் அதிரடியாக ஆடுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு மேட்ச் கிடைக்குமான்னு நெனச்சேன்.. ஆனா இப்போ 10 வருஷம் விளையாடிட்டேன் – ஜஸ்ப்ரீத் பும்ரா நெகிழ்ச்சி

யுவ்ராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் சாதனை என்பதை யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனாலும் எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது? ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் அந்த சாதனையை முறியடிக்கலாம். ஆனாலும் அந்த சாதனையை தகர்ப்பது என்பது எளிதல்ல என்று அபிஷேக் ஷர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -