கேப்டன், கோச், ஹார்டிக் பாய் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான்.. அதான் என்னை காப்பாத்துச்சு – அபிஷேக் சர்மா பேச்சு

Abhishek Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் இளம் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவிற்கு இந்த தொடர் அவர் எதிர்பார்த்தது போன்று அமையாமல் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. இருப்பினும் தான் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கும் அவர் உதவியிருந்தார்.

எனக்கு சீனியர் வீரர்களிடம் இருந்து கிடைத்த அட்வைஸ் : அபிஷேக் சர்மா பேச்சு

இதன் காரணமாக இனிவரும் டி20 போட்டியிலும் அபிஷேக் சர்மா துவக்க வீரராக தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியின் நிர்வாகத்தின் ஆதரவு காரணமாக அவர் தொடர்ந்து விளையாடி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று லீக் போட்டிகளில் டக் அவுட் ஆனதும் தனக்கு கேப்டன், பயிற்சியாளர் மற்றும் சீனியர் வீரரான ஹார்டிக் பாண்டியா ஆகியோரிடம் இருந்து என்ன அறிவுரை கிடைத்தது? என்பது குறித்து சில கருத்துக்களை அபிஷேக் ஷர்மா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நீங்கள் சிறப்பாக விளையாடாத போது உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் மிகவும் மோசமாக இருக்கும்.

ஏனென்றால் மக்கள் நம்மிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத போது நிச்சயம் விமர்சனம் எழும். அந்த வகையில் நான் முதல் மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட் ஆனதும் நிறைவே விமர்சனங்கள் இருந்தன. அப்போது பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் மூத்த வீரர் ஹார்டிக் பாண்டியா ஆகிய மூவரும் என்னை உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து வெளியேற சொன்னார்கள்.

- Advertisement -

அவர்கள் சொன்னபடியே நான் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறினேன். சமூக வலைதளத்தில் நிறைய செய்திகள் என்னுடைய பார்ம் குறித்து பகிரப்பட்டு வந்தது. நான் அதிலிருந்து வெளியே வந்ததால் தான் என்னால் தப்பிக்க முடிந்தது. மக்கள் நம்மிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும் காரணத்தினால் நிறையவே விமர்சனங்கள் இருக்கும்.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை பார்த்தா எங்க எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் – சஞ்சு சாம்சன் வெளிப்படை

ஆனால் அவர்கள் மூவரும் கூறியபடியே நான் சமூக வலைதளத்தில் இருந்து வெளியே வந்து என்னுடைய ஆட்டத்தில் கவனத்தில் செலுத்திய பின்னர் மட்டுமே மீண்டும் சிறப்பான ஃபார்மிற்கு வர முடிந்தது என அபிஷேக் ஷர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement