இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதனால் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட்டான அவர் பெரியளவில் விமர்சிக்கப்பட்டார். அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக நீக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு கூட பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.
அபிஷேக் சர்மாவை பார்த்து எங்களுக்கு பொறாமை : சஞ்சு சாம்சன்
ஆனாலும் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்த இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கியது. அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா சூப்பர் 8 சுற்றின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்ததோடு மட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 21 பந்துகளை மட்டுமே சந்தித்து 52 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டெல்லியில் நடைபெற்ற பிசிசிஐ விருது விழா ஒன்றில் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டு அளிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சஞ்சு சாம்சன் அபிஷேக் ஷர்மாவின் ரசிகர் பட்டாளம் குறித்து சில நகைச்சுவையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
அபிஷேக் சர்மாவிற்கு ரசிகர்களிடம் இருந்து நிறைய உற்சாக குரல் வருவதை பார்த்து எங்களது வீரர்களே பொறாமைப்படுவார்கள். ஏனெனில் இந்தியாவில் எங்கு சென்றாலும் அபிஷேக், அபிஷேக் என்ற குரல் கேட்கிறது. ரசிகர்கள் வேறு யாரையும் பார்ப்பார்களா? இல்லையா? என்று கூட நாங்கள் நினைத்திருக்கிறோம். தற்போதைய டி20 அணியின் சூப்பர் ஸ்டார் என்றால் அபிஷேக் ஷர்மா தான் என சஞ்சு சாம்சன் கூறினார்.
மேலும் இந்த விழாவில் தன்னுடைய ஆட்டம் குறித்து பேசிய அபிஷேக் சர்மா கூறுகையில் : என்னுடைய இலக்கு இந்திய அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவது தான். ஆனால் அது என் கையில் இல்லாததால் நான் அது குறித்து சிந்திப்பதை விட்டு விட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் சிங் கொடுத்த அறிவுரைகளின் வகையில் அனைத்தையும் பின்பற்றி விளையாடுகிறேன்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் சிறந்த துவக்க வீரர் யார்? விராட் கோலி தேர்வு செய்த அந்த நபர் யார் தெரியுமா? – விவரம் இதோ
நம்முடைய கையில் இல்லாத வாய்ப்பு குறித்து நாம் கவலைப்பட கூடாது. தற்போது ஒரு வடிவத்தில் நான் விளையாடி வந்தாலும் இந்திய அணி வெற்றிக்காக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். அது என்னுடைய நீண்ட நாள் கனவு என அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



