லாராவின் அட்வைஸ் ஹெல்ப் பண்ணுது.. எங்களுக்கு சாதகமா பிட்ச் கொடுத்த அவங்களுக்கு நன்றி.. அபிஷேக் பேட்டி

Abhishek Sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி நடைபெற்ற 69வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 214/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதர்வா டைட் 46, ரிலீ ரோசவ் 49, பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 215 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் டக் அவுட்டானாலும் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கி 66 (28) ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நிதிஷ் ரெட்டி 37, ராகுல் திரிபாதி 33, ஹென்றிச் க்ளாஸென் 42 ரன்கள் விளாசி 19.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் அபிஷேக்:
அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 2, அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் 8வது வெற்றியை பதிவு செய்த ஹைதெராபாத் அணிக்கு அதிகபட்சமாக 66 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த வருடம் பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் பிரைன் லாரா கொடுத்த ஆலோசனை தற்போது தமக்கு உதவுவதாக அபிஷேக் கூறியுள்ளார்.

அத்துடன் ஹைதெராபாத் மைதானத்தில் 7 போட்டிகளில் 6 வெற்றிகள் பெறுவதற்கு தங்களுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்து கொடுத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது எந்த பேட்ஸ்மேனுக்கும் நேரத்தை பொருத்ததாகும். என்னுடைய நாட்கள் நன்றாக செல்வதால் அதை நான் எனது அணிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இலக்கு பெரிதாக இருந்ததால் நான் முக்கிய பங்காற்ற விரும்பினேன்.”

- Advertisement -

“ஏற்கனவே சொன்னது போல சயீத் முஷ்டாக் அலி தொடரிலேயே ஐபிஎல் தொடரில் எவ்வாறு நான் அதிரடியாக விளையாடப் போகிறேன் என்ற தெளிவு கிடைத்தது. பிரையன் லாரா பயிற்சியாளராக இருந்தார். அவருடன் சேர்ந்து சில வேலைகள் செய்தேன். இப்போதும் அவர் தொடர்பில் இருப்பது எனக்கு உதவியாக இருக்கிறது. சுமாரான பந்துகளில் அதிரடியாக விளையாடி அழுத்தத்தை பவுலர்கள் மீது போட முயற்சிக்கிறேன்”

இதையும் படிங்க: 41 சிக்ஸ்.. பஞ்சாப்பின் ஆறுதல் வெற்றியையும் பறித்த ஹைதராபாத்.. அபிஷேக் சர்மா புதிய சாதனை

“ஹர்ஷல் படேலுக்கு எதிராக விளையாட நான் தயாராக இருந்தேன். அவருக்கு எதிராக சிங்கிள் எடுக்க முயற்சித்த ஒரு பந்து பவுண்டரிக்கு சென்றது. இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன். அவர்கள் எங்களுடைய ஸ்டைலுக்கு பொருந்தக்கூடிய பிட்ச்களை கொடுத்தனர்” என்று கூறினார்.

Advertisement