3 போட்டியில் 87 ரன்ஸ் தேவை.. கிங் கோலியின் 8 வருட சாதனையை உடைக்கப் போகும் அபிஷேக் சர்மா

Abhishek Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போட்டி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அழகான தரம்சாலா மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு துவங்குகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுவதற்கு 2 அணிகளும் பயிற்சிகளை செய்து தயாராக இருக்கின்றன.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை:

முன்னதாக இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அபிஷேக் சர்மா துவங்கிய போதிலும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. எனவே எஞ்சிய போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. இந்த நிலையில் எஞ்சிய 3 போட்டிகளில் அபிஷேக் சர்மா இன்னும் 87 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் விராட் கோலியை முந்தி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் கடந்த வருடம் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார். அதே வேகத்தில் இந்த வருடமும் அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இதுவரை 39 டி20 போட்டிகளில் 1533* ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அபிஷேக் உடைப்பாரா:

அதாவது 2025ஆம் ஆண்டு சர்வதேசம், ஐபிஎல், சயீத் முஸ்தாக் அலி கோப்பை ஆகிய அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டிலும் விளையாடிய 39 போட்டிகளில் அவர் 1533 ரன்களை 41.33 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். எனவே இன்னும் 87 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அபிஷேக் சர்மா படைப்பார்.

இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. ராணா, கிருஷ்ணாவை பெஸ்ட் என்பதை காட்டிய சிராஜ்.. சக வீரரிடம் நெகிழ்ச்சி செயல்

இதற்கு முன் 2016ஆம் ஆண்டு விராட் கோலி 31 டி20 போட்டிகளில் 1614 ரன்களை 89.66 சராசரியில் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் கிங் கோலி 973 ரன்கள் குவித்ததை மறக்க முடியாது. அவருடைய சாதனையை தற்போது அபிஷேக் ஷர்மா உடைப்பதற்கு 2025இல் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 87 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement