
இந்திய டி20 அணியின் நட்சத்திர அதிரடி துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய பின்னடைவை சந்தித்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இவர் இந்த உலகக்கோப்பை தொடரில் அசத்துவார் என்று இந்த தொடருக்கு முன்னதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதேபோன்று சூப்பர் 8 சுற்றிலும் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்த அவர் அங்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் சிரமத்தை சந்தித்தார். இப்படி இந்த தொடர் முழுவதுமே பெரிய சரிவை சந்தித்த அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.
அந்த போட்டியின் போது 21 பந்துகளை சந்தித்திருந்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த அதிரடியான துவக்கம் காரணமாக இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றது.
இந்நிலையில் இந்த தொடரானது அவருக்கு ஏற்றத்தாழ்வு அமைந்த ஒரு தொடராக முடிவடைந்த வேளையில் துவக்கம் சரியாக இல்லை என்றாலும் இறுதி போட்டியில் ஒரு மாபெரும் சாதனையுடன் அவர் இந்த தொடரை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : ஷாஹித் அப்ரிடி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக சஞ்சு சாம்சன் – நிகழ்த்திய அசத்தல் சாதனை
நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக எய்டன் மார்க்ரம் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த வேளையில் நியூசிலாந்து அணிக்கான இறுதிப் போட்டியின் போது 18 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக அபிஷேக் ஷர்மா சாதனையுடன் இந்த தொடரை நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.