- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்து விராட் கோலியின் சாதனையை நூலிழையில் தவறவிட்ட – அபிஷேக் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 8-ஆம் தேதியான இன்று பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன் காரணமாக இந்திய அணியானது தற்போது முதலில் விளையாடி வருகிறது.

இரட்டை சாதனையை நிகழ்த்திய அபிஷேக் சர்மா :

அப்படி முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியானது தற்போது வரை 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை குவித்திருக்கும் வேளையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்களையும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்களையும் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் 11 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இந்த 1000 ரன்களை அடித்ததன் மூலம் இரண்டு முக்கிய சாதனைகளை இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் படைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 29 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் 28-வது இன்னிங்ஸில் 1000 ரன்களை பூர்த்தி செய்து அதிவேகமாக சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக விராட் கோலி 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த வேளையில் அபிஷேக் சர்மா 28 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த சூரியகுமார் யாதவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கு பும்ரா – 1 விக்கெட் போதும்

அந்தவகையில் ஏற்கனவே சூரியகுமார் யாதவ் 573 பந்துகளில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்திருந்த வேளையில் தற்போது 528 பந்துகளை மட்டுமே சந்தித்து அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து அவரது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -