இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு ரன் கூட அடிக்காமல் ஓய்வுபெற்ற வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Abhishek
- Advertisement -

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்திய அணியில் எப்படியாவது இடம்பெற்று விளையாட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அதற்காக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி அங்கு தனது திறமையை வெளிப்படுத்திய பின் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தனது கடுமையான உழைப்பின் காரணமாக அபிஷேக் நாயர் 2009ம் ஆண்டு இந்திய அணியில் தேர்வானார். இவர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்.

abhishek 2

- Advertisement -

அந்த சுற்றுப்பயணத்தின் 3வது ஒருநாள் போட்டியில் அபிஷேக் நாயருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அபிஷேக் நாயர் இடம் பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக முழுவதும் நடைபெறவில்லை. இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் அபிஷேக் நாயருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது. இதையடுத்து நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியிலும் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியிலும் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணியில் இரண்டு முறை விளையாட வாய்ப்பு கிடைத்தும் மழையின் காரணமாக விளையாட முடியாமல் போனதால் அபிஷேக் நாயர் வருத்தத்துடன் இந்தியா திரும்பினார். இதன் பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

Abhishek 1

இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்திய அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது. இதில் 4-வது விக்கெட்டுக்காக விராட் கோலியுடன் இணைந்து விளையாடினார் அபிஷேக் நாயர். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ரன்கள் எடுப்பதற்குள் அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதில் அபிஷேக் நாயர் ஏழு பந்துகளை பிடித்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

இதுவரை மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் நாயர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. மேலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதன் மூலம் வித்தியாசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அது என்னவென்றால் “3 சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்ற விளையாடி ஒரு ரன் கூட எடுக்காத வீரர்” என்று வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார் அபிஷேக் நாயர். இதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் தனது கவனத்தை செலுத்தி பின்னர் ஓய்வினை அறிவித்தார்.

Advertisement