
இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ள இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதையும் நிரூபித்துள்ளது. குறிப்பாக மும்பையில் நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் விளையாடிய 248 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 10.3 ஓவரில் சுருட்டி வீசிய இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135 ரன்கள் 2 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். அந்தப் போட்டியில் அவர் படைத்த சில சாதனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (135) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 126 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதத்தை அடித்து குறைந்தது 1 எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார்.
இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரே டி20 போட்டியில் சதத்தையும் விக்கெட்டும் எடுத்ததில்லை.
3. இப்போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைத்த அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா தலா 10 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.
4. இந்தப் போட்டியில் முதல் 6 ஓவரில் மட்டும் அபிஷேக் 58 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 53 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
5. இந்தப் போட்டியில் 10.1 ஓவரில் அவர் சதத்தை தொட்டார். அதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டியில் குறைந்த ஓவரில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் எங்களோட ஸ்டைல்.. இனிமேல் இப்படித்தான் ஆடுவோம்.. வெற்றிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ்
இதற்கு முன் 2023இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் குவிண்டன் டீ கான் 10.2 ஓவரில் 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
6. சர்வதேச டி20 போட்டியில் குறைந்தது 1 விக்கெட்டை எடுத்து அதிகபட்ச ஸ்கோர் (135) அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக 2016 சிட்னி போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 124* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.