
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 171/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு 10 ஓவரில் 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் 47 (28) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் பட்டாசாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 74 (39) ரன்கள் விளாசி தம்மை உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். இறுதியில் திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தார்.
அதனால் 18.5 ஓவரில் 174/4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று பாகிஸ்தானை இத்தொடரில் 2வது முறையாக வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு 6 பவுண்டரி 5 சிக்சருடன் 74 ரன்களை 189 ஸ்ட்ரைக் ரேட்டில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கி முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் பவுலர்கள் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் தேவையின்றி தம்மையும் கில்லையும் வம்பிழுத்தது தமக்கு பிடிக்கவில்லை என்று அபிஷேக் கூறியுள்ளார்.
அதனாலேயே தமக்கு பள்ளி வயதிலிருந்தே நண்பனாக இருக்கும் சுப்மன் கில்லுடன் சேர்ந்து அவர்களுக்கு அதிரடி மருந்தை பதிலடியாக போட்டு விட்டதாக அபிஷேக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய ஆட்டம் மிகவும் எளிது. அவர்கள் (பாகிஸ்தான்) எவ்விதமான காரணமும் இல்லாமல் எங்கள் மேலே வந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை”
“அதனாலேயே நானும் அவர்கள் மேலே சென்றேன். நான் எங்களுடைய அணிக்காக வெற்றியைப் பெற விரும்பினேன். சுப்மன் கில்லும் நானும் பள்ளி நாட்களில் இருந்தே ஒன்றாக விளையாடி வருகிறோம். நாங்கள் ஒருவரை ஒருவரின் கம்பெனியை மகிழ்ச்சியுடன் சந்திக்கிறோம். அவரும் பாகிஸ்தானுக்கு திருப்பி கொடுத்த விதத்தை நான் விரும்பினேன்”
இதையும் படிங்க: பாகிஸ்தானை எதிரின்னு சொல்லாதீங்க.. இந்தியாவின் எதிரியாக இருக்க இந்த தகுதி வேணும்.. சூரியகுமார் மாஸ் பேச்சு
“ஒருவர் இப்படி விளையாடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு அணி நிர்வாகம் எனக்கு கொடுக்கும் ஆதரவே காரணமாகும். அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தையே நான் காண்பிக்கிறேன். அதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி எடுக்கிறேன். அது என்னுடைய நாளாக இருந்தால் கண்டிப்பாக போட்டியை என்னுடைய அணிக்காக நான் வென்று கொடுப்பேன்” எனக் கூறினார்.