வருண் இப்போ இந்திய அணியின் கேம் சேஞ்சர்.. லாரா, யுவி, வெட்டோரி உதவி பற்றி அபிஷேக் பேட்டி

Abhishek Sharma
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த போட்டியில் பந்து வீச்சில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

அதே போல பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக 76 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றினார். இந்நிலையில் கம்பேக் கொடுத்தது முதல் டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பவுலிங் துறையில் இந்திய அணியின் கேம் சேஞ்சராக செயல்பட்டு வருவதாக அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார். மேலும் தம்முடைய பேட்டிங்கில் முன்னேற ஜாம்பவான்கள் யுவ்ராஜ் சிங், பிரைன் லாரா, டேனியல் வெட்டோரி உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கேம் சேஞ்சர்:

இது பற்றி அபிஷேக் பேசியது பின்வருமாறு. “கடந்த சில தொடர்களாக பார்க்கும் போது வருண் எங்களுடைய கேம் சேஞ்சராக செயல்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் சூழ்நிலைகள் பொதுவாக இருக்கும். எனவே அவரைப் போன்ற பவுலரை நீங்கள் சார்ந்து இருப்பது முக்கியம். அவரை எதிரணி பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு மிகவும் கடினமாக கருதுகிறார்கள்”

“ரவி பிஸ்னோய், அக்சர் படேல் உள்ளிட்ட மற்ற எங்களின் பவுலர்களும் சமமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பேட்ஸ்மேனாக உங்களுக்கு 3 – 5 போட்டிகளாக நாங்கள் நன்றாக விளையாடவில்லை எனில் மனதில் தடுமாற்றம் ஏற்படும். ஆனால் அப்போது எங்களுடைய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் அனைத்து வீரர்களையும் நன்றாக கையாள்வார்கள்”

- Advertisement -

ஜாம்பவான்களின் ஆதரவு:

“நாங்கள் நன்றாக செயல்படவில்லை என்றாலும் அடுத்த போட்டிகளில் உங்களால் முடியும் எனவே உங்களது வழியில் விளையாடுங்கள் என்று அவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். ஹைதராபாத் அணியில் எனக்கு சுதந்திரமாக விளையாடுவதற்கான மெசேஜ் மற்றும் ஆதரவு கொடுத்தார்கள். அது எனக்கு இங்கே உதவுகிறது. முதலில் நான் யுவ்ராஜ் பாஜியுடன் இணைந்து வேலை செய்தேன்”

இதையும் படிங்க: 28 ரன்ஸ்.. 10 வருசம் கழித்து மாஸ் கம்பேக் கொடுப்பார்ன்னு பாத்தா.. சொதப்பிய ரோஹித் சர்மா.. ரசிகர்கள் ஏமாற்றம்

“அதற்கடுத்தபடியாக ஹைதராபாத் அணியில் பிரைன் லாராவுடன் வேலை செய்தது எனக்கு உதவியது. அதைத்தொடர்ந்து டேனியல் வெட்டோரி மிகவும் எளிமையாக பயிற்சிகளை கொடுத்தார். அவர்களுடன் இணைந்து வேலை செய்தது சுதந்திரத்துடன் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது. யுவ்ராஜ், லாரா வரிசையில் தற்போது கௌதம் பாய் உட்பட அனைவருமே என்னுடைய திறமைக்கு ஆதரவு கொடுத்து களத்தில் காண்பியுங்கள் என்று தான் சொன்னார்கள்” எனக் கூறினார்.

Advertisement