- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாதுவான டிராவிட் அப்படி சொல்வாருன்னு எதிர்பாக்கல.. வங்கதேசத்தை தெறிக்க விட்ட 2018 பின்னணி பற்றி அபிஷேக்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடை பெற்றார். ஒரு வீரராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் உலகக் கோப்பையை மட்டும் வென்றதில்லை. இருப்பினும் தற்போது பயிற்சியாளராக அவர் உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக விடை பெற்றார்.

சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே நியூசிலாந்தில் நடைபெற்ற 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரில் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் பிரித்வி ஷா தலைமையில் அசத்திய இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்கு சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

அதிரடி வார்த்தை:
இந்நிலையில் 2018 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் வங்கதேச அணி தங்களை தோற்கடித்த போது எல்லை மீறி திட்டியதாக இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார். அதனால் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையில் வங்கதேச அணியினர் திட்டினால் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு திட்டி பதிலடி கொடுக்குமாறு ராகுல் டிராவிட் தங்களிடம் சொன்னதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொதுவாகவே சாதுவாகவும் அமைதியாகவும் இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் அப்படி சொன்னதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அபிஷேக் கூறியுள்ளார். அதே சமயம் ட்ராவிட்டே அப்படி சொன்னதால் உத்வேகமடைந்து அபாரமாக விளையாடி வங்கதேசத்தை 131 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அண்டர்-19 ஆசியக் கோப்பையில் நாங்கள் வங்கதேசத்திடம் தோற்றோம்.

- Advertisement -

“அந்த நிலையில் உலகக் கோப்பையில் அவர்களை நாங்கள் எதிர்கொள்ளும் போது ஒருவேளை வங்கதேச அணியினர் திட்டினால் நீங்களும் அதற்கு திருப்பி பதிலடி கொடுங்கள் என்று ராகுல் டிராவிட் எங்களிடம் சொன்னார். ஆனால் அவர் அப்படி சொல்வார் என்று எங்கள் அணியில் இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருடைய வார்த்தைகளால் நாங்கள் அப்போட்டியில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடினோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 82 ரன்ஸ்.. சுயநலமின்றி தமிழக வீராங்கனையிடம் பெருந்தன்மை காட்டிய மந்தனா.. நேபாளை வீழ்த்திய இந்தியா

முன்னதாக அந்தப் போட்டியில் சுப்மன் கில் 86, அபிஷேக் சர்மா, பிரிதிவி ஷா 40 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 266 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய வங்கதேசத்தை ஆரம்பம் முதலே கச்சிதமாக பந்து வீசி மடக்கிய இந்தியா 134 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு கமலேஷ் நாகர்கோட்டி 3, அபிஷேக் சர்மா 2, சிவம் மாவி 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -