ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது முதல் சூப்பர் 4 போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் அடித்து 2வது முறையாக பாகிஸ்தானை தோற்கடிக்க உதவினர். முன்னதாக அந்தப் போட்டியில் சேசிங் செய்த இந்திய அணிக்கு எதிராக முதல் ஓவரை பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி வீசினர். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அபிஷேக் அதிரடியாக விளையாடினார்.
ஃபெர்சனல் அட்டாக்:
அதே போல ஹரிஷ் ரவூப் வீசிய பந்துகளையும் அபிஷேக் – சுப்மன் கில் அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்கள் குவித்தனர். அதனால் இவர்களை திறமையால் சாய்க்க முடியாது என்பதை உணர்ந்த ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் அவர்களிடம் வாய் வார்த்தைகளால் வம்பிழுத்தனர். அதற்கு வாய்மொழியாக பதிலடி கொடுத்த அபிஷேக் – கில் ஜோடி பேட்டிங்கிலும் வெளுத்து வாங்கி பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் தங்களுடைய அதிரடியைப் பார்த்த ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பந்து வீசிய பின்பும் தனிப்பட்ட முறையில் தங்களை தாக்கிப் பேசியதாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். அதனால் நேரடியாக அவுட்டாக்க முடியாமல் குறுக்கு வழியில் ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சித்த அவர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்று கில்லும் தாமும் முடிவெடுத்ததாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
சொல்லி அடித்தது பற்றி அபிஷேக்:
“இன்று அது போன்ற அதிரடியான செயல்திறனைக் கொண்டு வரவேண்டும் என்று நான் உணர்ந்தேன். ஏனெனில் ஒவ்வொரு பந்துக்குப் பின்பும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேலே செய்த தனிப்பட்ட தாக்குதல்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன்”
இதையும் படிங்க: அதைப் பற்றி கவலையில்ல.. வாழ்வா – சாவா தாண்டி இந்தியாவை ஃபைனலில் சந்திப்போம்.. பாக் வீரர் பேட்டி
“ஏனெனில் நீங்கள் அப்படி கிரிக்கெட்டை விளையாடக்கூடாது. அதனால் அவர்களுக்கு போட்டி முடிந்த பின் நாம் பதில் கொடுப்போம் என்று நானும் சுப்மன் கில்லும் பேசினோம்” என்று கூறினார். இதையும் சேர்த்து 2022 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி அனைத்து ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ந்து 7வது வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



