16 வயசுலயே ஸ்லெட்ஜிங்கில் காப்பாத்துனாரு.. 2007 பாத்து தான் விளையாடவே வந்தேன்.. குரு யுவராஜ் பற்றி அபிஷேக்

Abhishek Sharma 4
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் சமீப காலங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக அடித்து நொறுக்கிய அவர் 484 ரன்கள் விளாசி ஹைதராபாத் ஃபைனல் செல்ல உதவினர்.

அதனால் இந்தியாவுக்காகவும் தேர்வான அவர் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். ஆனால் அதற்கும் சேர்த்து 2வது போட்டியில் அடித்து நொறுக்கிய அவர் சதமடித்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வைத்தார். குறிப்பாக 82 ரன்களில் இருந்த போது அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை தொட்டது ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

- Advertisement -

குரு யுவராஜ்:
முன்னதாக தாம் இந்தளவு அசத்துவதற்கு யுவ்ராஜ் சிங் தான் முக்கிய காரணமாக இருப்பதாக அபிஷேக் சர்மா பலமுறை தெரிவித்துள்ளார். இந்நிலையில் 16 வயதிலேயே ரஞ்சிக்கோப்பையில் அவருடன் சேர்ந்து விளையாடிய அனுபவத்தை தற்போது அபிஷேக் பகிர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரஞ்சிக் கோப்பையில் எங்களுக்கு எதிராக ஒரு வீரர் சதமடித்தார்”

“அவருடைய பெயர் எனக்கு நினைவில்லை. அவரை நாங்கள் கொஞ்சம் ஸ்லெட்ஜிங் செய்ய திட்டமிட்டோம். ஒரு இளைஞன் உங்களிடம் அப்படி செய்தால் நீங்கள் கோபப்படுவீர்கள். ஆனால் நான் பேட்டிங் செய்ய சென்ற போது ஷார்ட் லெக்கில் நின்ற அவர் என்னைக் குறி வைத்தார். யுவி பாஜி மறுமுனையில் இருந்தார். அப்போது அவர் என்னை தொந்தரவு செய்வதை யுவராஜ் பார்த்தார்”

- Advertisement -

“அதைப் பற்றி என்னிடம் அவர் கேட்டார். அப்போது அந்தப் பையன் ஸ்லெட்ஜிங் செய்கிறார் என்று சொன்னேன். அதனால் யுவி பாஜி அந்தப் பையனை ஒருமுறை தான் பார்த்தார். உடனே அந்தப் பையன் மன்னிப்பு கேட்டார். என்னுடைய 16 வயதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய போது முதல் முறையாக யுவராஜ் பாஜியை பார்த்தேன். 800 – 900 ரன்கள் அடித்த அவருக்கு அது கம்பேக் சீசனாக இருந்தது”

இதையும் படிங்க: 17 வருட ஏக்கத்தை அவரோட கண்ணுல பாத்தேன்.. ராகுல் டிராவிட் குறித்து – ரவிச்சந்திரன் அஷ்வின் நெகிழ்ச்சி

“எப்போதும் அவர் தான் என்னுடைய ரோல் மாடல். சொல்லப்போனால் 2007 டி20 உலகக் கோப்பையில் அவரை பார்த்த பின்பே நான் கிரிக்கெட்டின் விளையாட உத்வேகமடைந்தேன். எனது மனதில் குழப்பம் அல்லது சந்தேகம் வரும் போது நான் அவரிடம் பேசுவேன். அதற்கு தேவையான பதிலை அவர் கொடுப்பார். யோக்ராஜ் சிங் சாரிடமும் நான் தொடர்பில் இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement