17 வருட ஏக்கத்தை அவரோட கண்ணுல பாத்தேன்.. ராகுல் டிராவிட் குறித்து – ரவிச்சந்திரன் அஷ்வின் நெகிழ்ச்சி

Ashwin
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றது. அதன் பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இந்த கோப்பையை இந்திய அணி வென்றது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. ராகுல் டிராவிடும் அந்த கொண்டாட்டத்தில் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

2007-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது கேப்டனாக செயல்பட்ட ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்று முடிவிலேயே வெளியேறியது. அதன் பின்னர் கேப்டன் பதிவு பறிக்கப்பட்ட ராகுல் டிராவிட் தொடர்ச்சியாக ஒரு வீரராக பயணித்து வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து கோப்பையை அவர் வென்றது குறித்து பேசியுள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறுகையில் : ஒரு அருமையான நபரை பற்றி பேச விரும்புகிறேன். 2007-ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிய போது அவர் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

பின்னர் ஒரு சாதாரண வீரராக செயல்பட்ட அவர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து அதே மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை கைப்பற்றியதை நான் கண்டேன். அது மிகச் சிறந்த தருணம் அதிலும் குறிப்பாக விராட் கோலி அவரை அழைத்து கோப்பையை அவர் கையில் கொடுக்கும்போது டிராவிட் வேகமாக கத்தி அழுதார்.

- Advertisement -

அந்த தருணத்தை அவர் எவ்வளவு ரசித்தார் என்பது அந்த மனநிலையை வைத்து என்னால் உணர முடிந்தது. அந்த 17 ஆண்டுகால ஏக்கம் அவர் கண்ணில் தெரிந்தது என்றும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இந்திய அணியுடன் என்ன செய்து வந்தார் என்பது எனக்கு தெரியும். அவருடைய அணுகுமுறையே இந்திய அணி கோப்பையை காரணம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒருவேளை ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வந்தா யார் கேப்டன்? – கண்டிப்பா இதுதான் நடக்கும்

இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய பிறகு தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட விரும்பிய அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும் நிச்சயம் அடுத்த ஆண்டு அவர் ஏதாவது ஒரு ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement