இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை எதிர்த்து விளையாடி இருந்தார். அந்த போட்டியின் போது முதல் பந்தை சந்தித்த அவர் ரன் எதுவும் எடுக்காமல் டாக் அவுட்டாகி வெளியேறிந்தார்.
அபிஷேக் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு :
கடந்த ஓராண்டாகவே மிகச்சிறப்பான பார்மில் இருந்து வரும் அவர் இந்த தொடரில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் சற்று பின்னடைவை சந்தித்தார்.
இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட வயிற்று உபாதை காரணமாக அவரால் இரண்டாவது லீக் போட்டியில் விளையாட முடியாமல் போனது.
பின்னர் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது பேசியிருந்த சூர்யகுமார் யாதவ் : அவர் இரண்டு போட்டிகளை இழக்கவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான். அதனால் அந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : பும்ராவை இப்படி பயன்படுத்தியது சூரியகுமார் யாதவ் செய்த தவறு – மோஹித் சர்மா விமர்சனம்
இந்நிலையில் வயிற்று உபாதை ஏற்பட்டதால் அபிஷேக் சர்மா 2 கிலோ வரை எடை இந்துள்ளதாகவும் அதன் காரணமாக அவரால் முழு உடற்தகுதியை எட்ட இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாத அவர் பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு பேட்டிங் பயிற்சிக்கு திரும்பி அடுத்த கட்ட போட்டிகளில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



